நாடுதழுவிய ரீதியில் இம்முறை பொசன் பண்டிகையினை கொண்டாட தீர்மானம்! -பிரதமர்

நாடுதழுவிய ரீதியில் இம்முறை பொசன் பண்டிகையினை கொண்டாட தீர்மானம்! -பிரதமர்

பொதுமக்கள் மிக பொறுப்புடன் பொசன் பண்டிகையினை கொண்டாட வேண்டும். என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பொசன் பண்டிகையினை கொண்டாடுவது  தொடர்பான பேச்சுவார்த்தை இன்று (22) பிரதமர் தலைமையில் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

சுகாதார ஆலோசனைக்கு அமைய  மக்களின் குறைவான பங்குப்பற்றலுடன் இம்முறை  பொசன் பண்டிகையினை கொண்டாட முடியும் என சுகாதார தரப்பினர் குறிப்பிட்டனர்.

நாடுதழுவிய ரீதியில் பொசன் பண்டிகை கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ளது. பெரஹர (ஊர்வலம்) செல்லும் போது மக்கள் சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். வயது வந்தோர், சிறு குழந்தைகளை  வீட்டில் பாதுகாப்பாக இருக்க வைப்பது அவசியமாகும் என பிரதமர் குறிப்பிட்டார்.

அநுராதபுரம் மிகிந்தலையில் 'ஆரோக்கிய பரமா திவா' என்ற தொனிப்பொருளுக்கு அமைய இம்முறை அரச பொசன் பண்டிகை விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முழு உலகமும் சுகாதார நெருக்கடியை எதிர்க்கொண்டுள்ள வேளையில் இம்முறை பொசன் பண்டிகை உள சுகாதார, ஆரோக்கியத்துக்கு  முக்கியத்துவம் கொடுத்து கொண்டாட கவனம் செலுத்தப்பட்டது.

வரலாற்று சிறப்பு கொண்ட பொசன் பண்டிகையினை இம்முறை   கொண்டாடும் போது கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அரசாங்கம்  முன்னெடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய உலகவாழ் மக்கள் அனைவரது சுகாதார பாதுகாப்புக்குமான விசேட பூஜை வழிபாடுகள் அரச பொசன் விழாவின் போது முன்னெடுக்கப்படும்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post