வயோதிப பெண் சடலமாக நாவலபிட்டி மாவெலி ஆற்றில் மீட்பு!

வயோதிப பெண் சடலமாக நாவலபிட்டி மாவெலி ஆற்றில் மீட்பு!

மாவெலி ஆற்றிலிருந்து வயோதிபப்பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக நாவலபிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

நாவலபிட்டி மாகும்புர பிரதேசத்தை சேர்ந்த 88 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தாயான கே.வெள்ளையம்மா என்பவரே இவ்வாறு இன்று சடலமாக மீட்கப்பட்டார்.

சடலமாக மீட்கப்பட்ட வயோதிப்பெண் நேற்று வெற்றிலை வாங்கி வருவதாக கூறி வீட்டிலிருந்து வந்தவரென்றும் மாவெளி ஆற்றை ஊடறுத்து செல்லும் ரயில் பாலத்தில் நடந்து செல்கையிலே தவறி ஆற்றில் வீழ்ந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

பொலிஸாரும் பொதுமக்களும் நேற்று மாலையிலிருந்து குறித்த வயோதிப் பெண்ணை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே ரயில் பாலத்திலிருந்து 200 மீட்டர் தூரத்தில் மாவெலி ஆற்றில் குழியிலிருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக நாவலபிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணை தொடர்வதாக நாவலபிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post