சவூதியில் எகிரும் கொரோனா தாக்கம்! இன்று 2039 புதிய கொரோனா நோயாளிகள்!

சவூதியில் எகிரும் கொரோனா தாக்கம்! இன்று 2039 புதிய கொரோனா நோயாளிகள்!

சவூதி அரேபியாவில் கடந்த 24 மணி நேரத்தில் (13) பதிதாக 2,039 பேருக்கு புதியதாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 46,869 ஆக உயர்ந்துள்ளதாக சவூதி சுகாதார அமைச்சு உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் இதுவரை சவூதியில் 283 பேர் கொரோனா காரணமாக மரணித்துள்ளதோடு 19,051 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அடையாளம் காணப்பட்டவர்கள் தனிமைப் படுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்படுவதாகவும், இதுவரை 400,000க்கும் அதிகமானவர்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் சவுதி அரேபிய செய்திகள் குறிப்பிடுகின்றன.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post