புலிகளும் ஸஹ்ரானும் இல்லாவிட்டாலும் ஆதரவாளர்கள் அரசியலில் செல்வாக்கு உண்டு! -மதுமாதவ

விடுதலைப் புலிகள் அமைப்பு மற்றும் தற்கொலை குண்டுதாரி ஸஹ்ரான் குழு ஆகியோர் அழிக்கப்பட்டாலும் அவர்களின் ஆதரவாளர்கள் அரசியலில் செல்வாக்கு செலுத்துகின்றார்கள்.

இவ்வாறானதொரு நிலையில் இனவாத வன்முறைகளை நாட்டில் இனியொரு போதும் தோற்றம் பெறாத அளவுக்கு தேசிய பாதுகாப்பு தற்போது பலப்படுத்தப்பட்டுள்ளது என பிவிதுறு ஹெல உறுமய அமைப்பின் உப தலைவர் மதுமாதவ அரவிந்த தெரிவித்தார்.

இன்று (21) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

விடுதலை புலிகள் அமைப்பினதும் தற்கொலை குண்டுதாரி ஸஹ்ரானின் நோக்கங்களை நிறைவேற்றும் தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள் அரசியலில் செல்வாக்கு செலுத்துகின்றார்கள்.

கொரோனா வைரஸ் விவகாரத்திலும் எதிர்தரப்பினர் இனவாத முரண்பாட்டை தோற்றுவிக்க முயற்சித்தார்கள் என்றும் அவர் கூறினார்.

-metronews 

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post