கொழும்பு, மாளிகாவத்தை மோதலில் 3 பேர் பலி! 9 பேர் பலத்த காயம்!

கொழும்பு, மாளிகாவத்தை பகுதியில், வீடொன்றில் நபர் ஒருவரினால் பணம் பகிர்ந்தளிக்கப்பட்ட போது இடம்பெற்ற மோதலில் படுகாயமடைந்த 9 பேர் இதுவரை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை குறித்த சம்பவத்தில் மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த சந்தர்ப்பத்தில் அப்பகுதியில் 300க்கும் அதிகமானோர் திரண்டு இருந்ததாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

மேலும் தெஹிவளை பிரதேசத்தை சேர்ந்த வர்த்தகர் ஒருவரால் குறித்த பணம் பகிர்ந்தளிக்கப்பட்டு உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
Previous Post Next Post