இலங்கை வரலாற்றில் முதன்முதலாக இடம் பிடித்த இன்றைய பங்கு பரிவர்த்தனை!

கொழும்பு பங்குச் சந்தையின் இன்றைய தினம் (21) பங்கு பரிவர்த்தனை முடிவின் போது அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 129.58 ஆக அதிகரித்து 4784.80 ஆக பதிவானது.

ஐந்து நாட்கள் தொடர்ச்சியான வளர்ச்சியின் பின்னர் நேற்றைய தினம் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 45 புள்ளிகளாக வீழ்ச்சி அடைந்த நிலையில் மீண்டும்  வழமைபோல் வளர்ச்சியை காட்டிய அனைத்து பங்கு விலைச் சுட்டெண் கடந்த தினத்துடன் ஒப்பிடுகையில் 2.78 சதவீத வளர்ச்சியை அடைந்தது. 

இதேவேளை நாளின் முக்கிய விடயமாக  S&P SL 20 சுட்டெண் இன்றைய நாளில் வரலாற்றில் அதிகமான சதவீதத்தில் வளர்ச்சியை எட்டியதன் ஊடாக இன்றைய தினம் வரலாற்றில் இடம்பெற்றுள்ளது. 

S&P SL 20 சுட்டெண் முன்னைய தினத்துடன் ஒப்பிடுகையில் 6.98 சதவீத வளர்ச்சியை பதிவு செய்தது. 

இன்றைய நாளில் மொத்த பங்கு பரிவர்த்தனை 2.3 பில்லியன் ரூபாவாக பதிவானதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post