கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நேற்று (05) இலங்கையில் 9 ஆவது மரணம் பதிவான நிலையில், மரணித்த பெண்ணுக்கு மேலதிகமாக அன்றைய தினம் மேலும் மூன்று தொற்றாளர்கள் கொழும்பில் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார சேவைகள் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்த நிலையில், தற்போது அம் மூவருக்கும் கொரோனா தொற்று இல்லை என உறுதியாகியுள்ளது.
அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனைகளின் போது அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உருதியானதாகவும், அதனால் அவர்கள் மூவரின் பெயர்களையும் தொற்றாளர் பட்டியலில் இருந்து நீக்க நடவடிக்கை எடுத்ததாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.