அரச ஊழியர்களின் மே மாத சம்பளத்தை நன்கொடையாக வழங்குமாறு கோரிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அரச ஊழியர்களின் மே மாத சம்பளத்தை நன்கொடையாக வழங்குமாறு கோரிக்கை!

President reappoints P.B. Jayasundara as the Treasury Secretary
அரச ஊழியர்களின் மே மாதத்திற்கான சம்பளத்தை நன்கொடையாக வழங்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி. ஜயசுந்தர கோரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டின் வரவு செலவுத் திட்ட அழுத்தங்களை மக்களின் மீது திணிக்காமல் இருப்பதற்காக மே மாதத்திற்கான முழுச் சம்பளத்தையோ அல்லது பகுதியையோ வழங்குமாறு அவர் கோரியுள்ளார்.

மே மாதச் சம்பளத்தை கைம்பெண்கள் மற்றும் அனாதரவான பிள்ளைகள் நிதியத்திற்கு வழங்குமாறு அவர் தெரிவித்துள்ளார்.

அரச ஊழியர்களுக்கான சம்பளக் கொடுப்பனவிற்காக மாதம் ஒன்றுக்கு 100 பில்லியன் ரூபா பணம் தேவைப்படுகின்றது.

ஒரு மாத சம்பளத்தை அனைத்து அரச ஊழியர்களும் வழங்கினால் அந்த தொகை திறைசேரிக்கு செல்லும் எனவும் இதன் மூலம் அரச செலவுகள் குறைந்து வருமானம் அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் ஊடாக நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான கடன் அழுத்தங்களை முகாமைத்துவம் செய்து கொள்ள முடியும் என ஜனாதிபதியின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெளிநாடுகளிலிருந்து கடன், நன்கொடைகள் பெற்றுக்கொள்ளும் அதேவேளை எமது சக்தியையும் நாம் பிரதிபலிக்க வேண்டியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் பிரதமரின் செயலாளர், அமைச்சரவை செயலாளர், அரசாங்க திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், அரச வங்கிகள் உள்ளிட்ட நிறுவனங்களின் பிரதானிகளுக்கு ஜனாதிபதியின் செயலாளர் கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தின் அனைத்து பணியாளர்களும் தங்களது சம்பளத்தை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும், ஏனைய அரச ஊழியர்களும் தங்களது சம்பளங்களை வழங்கி இதில் இணைந்து கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனைவருக்கும் மாதச் சம்பளத்தை வழங்க முடியாதிருக்கலாம் எனவும் அவ்வாறானவர்கள் அரைவாசி சம்பளம், ஒரு கிழமைக்கான சம்பளம் அல்லது நாள் ஒன்றுக்கான சம்பளத்தையேனும் நன்கொடையாக வழங்க முடியும் என ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்துள்ளார் என தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.