இலங்கையில் கடன் வட்டி வீதங்கள் குறித்து இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையில் கடன் வட்டி வீதங்கள் குறித்து இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை!

கடன் வட்டி வீதங்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி, நாட்டில் இயங்கி வரும் அனைத்து நிதி நிறுவனங்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் வட்டி வீதங்களை குறைக்குமாறு மத்திய வங்கி, அனைத்து நிதி நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

கடன் வட்டி வீதங்ளை குறைப்பது தொடர்பில் நிதி நிறுவனங்கள் மேலும் காலம் தாழ்த்தினால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.

நிதிக் கொள்கைகளின் அடிப்படையில் மத்திய வங்கி எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு உரிய முறையில் நிதி நிறுவனங்கள் கடன் வட்டி வீதங்களை குறைப்பதற்கு காலம் தாழ்த்துவது ஏமாற்றமளிப்பதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.