அடுத்த அரசியல் தலைமுறையை உருவாக்கும் பொறுப்பும் என்னிடமிருந்தது! -பிரதமர்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அடுத்த அரசியல் தலைமுறையை உருவாக்கும் பொறுப்பும் என்னிடமிருந்தது! -பிரதமர்

“இலங்கையின் சனத்தொகை மிகவும் அழகாக கலந்துகாணப்டுகின்றது. இதன் காரணமாக தனிதமிழ் நாடு என்பது சாத்தியமில்லை. தமிழ் அரசியல்வாதிகள் இந்த யதார்த்தத்தை கருத்திலெடுத்து அதற்கு ஏற்ற விதத்தில் தங்களை மாற்றிக்கொள்ளவேண்டும்” என பிரதமர் மகிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ் அரசியல்வாதிகள் மிக நீண்டகாலமாக இலங்கையின் வடக்குகிழக்கில் தனித்தமிழ் நாட்டை உருவாக்கும் எண்ணத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளனர், அல்லது தனிநாட்டிற்கு நிகரான அளவு அதிகாரங்களை பெற்றுக்கொள்ளும் எண்ணத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளனர். இது நடைமுறையில் சாத்தியமாககூடியதொன்றல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் நியுஸ் 18ற்க்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். பேட்டியின் முக்கியமான பகுதிகள் வருமாறு;

கேள்வி; பொது வாழ்க்கையில் 50 வருடங்களை பூர்த்திசெய்துள்ளீர்கள். சார்க் அமைப்பினை பொறுத்தவரை இன்னமும் நாட்டிற்கு தலைமைதாங்கும் மூத்த தலைவர் நீங்கள் இத்தனை வருடகால அரசியல்வாழ்க்கையை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்; இது பல விடயங்கள் இடம்பெற்ற 50 வருடங்களாகும். இந்த காலப்பகுதியில் குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை மாத்திரம் நாட்டில் அமைதிநிலவியது.

நான் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டு ஒரு வருடத்திற்கும் குறைவான காலப்பகுதிக்குள் ஜேவிபியின் முதலாவது கிளர்ச்சியினால் இலங்கை அழிக்கப்பட்டது.

2005 இல் நான் ஜனாதிபதியான வேளை என் முன்னாலிருந்த மிகப்பெரிய சவால், நான் எதிர்கொண்ட மிகப்பெரிய சவால் விடுதலைப் புலிகளின் பயங்கரவாதம்.
நாங்கள் சவால்களை எதிர்கொண்டுள்ளோம். அவற்றை வெற்றி கண்டுள்ளோம்.
திரும்பிப்பார்க்கின்றபோது 50 வருட பொதுவாழ்க்கையை பூர்த்தி செய்ய முடிந்தது குறித்தும் மக்களிற்கு சேவையாற்ற முடிந்தமை குறித்தும் நான் நன்றியுடையவனாக உள்ளேன்.


கேள்வி: 2005 முதல் 2015 வரையாக காலப்பகுதியில் நீங்கள் விடுதலைப் புலிகளை அழித்து அமைதியை ஏற்படுத்தினீர்கள். நீங்கள் உங்கள் 50 வருடகால அரசியல் வாழ்வில் கையாண்ட மிகக்கடுமையான பணி என கருதுகின்றீர்களா?

பதில்; அது எந்த தலைவருக்கும் கடினமானதாக காணப்பட்டிருக்கும்.

தலைமைத்துவத்தில் அனுபவம் மிக்க திறமை மிக்க அணியை பெற்றதில் நான் கொடுத்துவைத்தவன். இராணுவம் கடற்படை விமானப்படை பொலிஸாருடன் மிகச்சிறந்த புலனாய்வு சேவை என்பது எந்த ஜனாதிபதியும் விருப்பப்படும் விடயம்.

படையினரை நிர்வகிப்பது மிகவும் முக்கியமான விடயம். இந்த விடயத்தில் என்னால் ஒரேயொருவரை மாத்திரமே நம்பமுடியும் என்றால் அது எனது இளைய சகோதரரே என்பது எனக்கு தெரிந்திருந்தது.

நான் ஜனாதிபதியானதும் மேற்கொண்ட முதல் நியமனம் கோத்தாபாய ராஜபக்சவை பாதுகாப்பு செயலாளராக நியமித்ததே.

யுத்தத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் இது மிகப் பெரிய சாதனையாக காணப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை அவர்கள் அந்த வெற்றியை பெறுவதற்கான அரசியல் தலைமைத்துவத்தையும் பாதுகாப்பையும் வழங்கியதை நான் பெரும் பாக்கியமாக கருதுகின்றேன்.
விடுதலைப் புலிகள் அமைப்பு என்பது அமெரிக்காவின் எவ்பிஐயினாலேயே உயர்ந்த இடமளிக்கப்பட்ட அமைப்பு என்பதை கருத்தில்கொள்ளவேண்டும்.

கேள்வி; தமிழர் விவகாரத்திற்கு தீர்வு காணப்பட்டுள்ளதா?

பதில்; இந்த கேள்விக்கு பதில் அளிப்பதற்கு முதல் இலங்கையில் தமிழ் மக்களிற்குள்ள பிரச்சினைகளிற்கும் தமிழ் அரசியல்வாதிகளிற்கு உள்ள பிரச்சினைகளிற்கும் இடையில் வேறுபாடு உள்ளது. இவை இரண்டும் வித்தியாசமானவை என்பதை கருத்திலெடுக்கவேண்டியது அவசியம்.

அவர்களிற்கு சேவையாற்றியதும், முன்னர் அவர்களிற்கு மறுக்கப்பட்ட வாய்ப்புகளை, நலன்களை, திட்டங்கள் அபிவிருத்திகள் மூலம் நல்லிணக்கத்திற்கு உதவுவதற்காக வழங்கியதும் எனது மகிழ்ச்சிக்குரிய விடயங்கள்.

ஆனால் அரசியல்வாதிகளை பொறுத்தவரை பாதை கடினமானது நீண்டது. தமிழ் அரசியல்வாதிகள் மிக நீண்டகாலமாக இலங்கையின் வடக்குகிழக்கில் தனித்தமிழ் நாட்டை உருவாக்கும் எண்ணத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளனர்,அல்லது தனிநாட்டிற்கு நிகரான அளவு அதிகாரங்களை பெற்றுக்கொள்ளும் எண்ணத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளனர்.

இது நடைமுறையில் சாத்தியமாககூடியதொன்றல்ல.
அனேகமான தமிழர்கள் வடக்குகிழக்கிற்கு வெளியே வாழ்கின்றனர் , கிழக்கில் தமிழர்கள் சிறுபான்மையானவர்கள்.

கொழும்பு நகரில் பெரும்பான்மையானவர்கள் தமிழர்களும் முஸ்லீம்களுமே.
இலங்கையின் சனத்தொகை மிகவும் அழகாக கலந்துகாணப்டுகின்றது இதன் காரணமாக தனிதமிழ் நாடு என்பது சாத்தியமில்லை,தமிழ் மக்கள் அரசியல்வாதிகள் இந்த யதார்த்தத்தை கருத்திலெடுத்து அதற்கு ஏற்ற விதத்தில் தங்களை மாற்றிக்கொள்ளவேண்டும்.

கேள்வி; நீங்கள் 2015 முதல் 2019 வரை அதிகாரத்தில் இருக்கவில்லை- அதனை பற்றி கூறுங்கள்?

பதில்; 2015 இல் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதும் எனது நடவடிக்கைகளை பூர்த்தி செய்துகொண்டு வீரகெட்டியவில் உள்ள எனது வீட்டிற்கு சென்று எனது ஒய்வை அனுபவிப்பதற்கு நான் நேரத்தை வீணடிக்காமல் செயற்பட்டேன்.

எனினும் மக்கள் என்னை மீண்டும் திரும்பிவந்து தங்களிற்கு தலைமை தாங்குமாறு கேட்டுக்கொண்டனர்.

நான் என்னை சுற்றி என்ன நடக்கின்றது என பார்த்தவேளை எனது ஆட்சிக்காலத்தில் பணியாற்றிய அரச உத்தியோகத்தர்கள் பழிவாங்கப்படுவதாலும் புலனாய்வு உத்தியோகத்தர்கள் துன்புறுத்தப்படுவதாலும் இலங்கையின் அரசியல் தலைமை நொருங்குவதை பார்த்தேன்.

அவ்வேளை எனது பணி இன்னமும் முடிவடையவில்லை என்பதை உணர்ந்தேன். 
தேசத்தின் தந்தை என்ற அடிப்படையில் அடுத்த தலைமுறை அரசியல்வாதிகளை உருவாக்கும் பொறுப்பும் என்னிடமிருந்தது.

-Jaffna Muslim

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.