ஜனாஸாக்களை எரிக்காமல் நல்லடக்கம் செய்யும் கோரிக்கையை, அரசிற்கு வழங்க ஒரு இலட்சம் கையொப்பங்கள் சேகரிப்பு!

ஜனாஸாக்களை எரிக்காமல் நல்லடக்கம் செய்யும் கோரிக்கையை, அரசிற்கு வழங்க ஒரு இலட்சம் கையொப்பங்கள் சேகரிப்பு!


- ஏ.பி.எம்.அஸ்ஹர்

கொவிட்19 இனால் மரணித்த ஜனாஸாக்களை எரிக்காமல் நல்லடக்கம் செய்யுமாறு கோரி  அரசிற்கு சிவில் சமூக அழுத்தத்தை வழங்கும் நோக்கில்  அம்பாரை மாவட்டத்தில் பெறப்படவுள்ள 100,000 (ஒரு இலட்சம்) கையெழுத்துக்களைப்பெற்றுக் கொள்ளும் நிகழ்வு நேற்று (10) அக்கரைப்பற்றில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

முஸ்லிம் மரபுகள் மற்றும் கலாசார மையத்தின் முக்கியஸ்தரும் முன்னாள் கிழக்கு மாகாண உறுப்பினருமான ஏ.எல்.தவத்தின் வழிகாட்டலின் கீழ இடம் பெறும் இக்கையெழுத்து வேட்டை தொடர்பாக அவர் கருத்துத்தெரிவிக்கையில்,

அனைவரும் இந்தப் பணிக்காக ஒத்துழைப்பு வழங்குவதோடு அம்பாறை மாவட்டத்தில் இது வெற்றிகரமாக நிகழ்ந்தால் ஏனைய  அனைத்து மாவட்டங்களுக்கும் இது பரவலாக்கப்படும் இதே வேளை ஏனைய மாவட்டங்களில் சிங்கள சகோதரர்கள் கூட இதற்கு ஆதரவு தெரிவித்து கையொப்பமிட தயாராக இருக்கிறார்கள் எனவும் சில சிங்கள சகோதரர்கள் ஜனாஸா எரிப்புக்கு எதிராக  ஏலவே மனித உரிமை ஆணைக்குழு வரை சென்றுவிட்டனர்எனவும். சில சிங்கள சகோதரர்கள் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்துள்ளனர் எனவும் தெரிவித்தார்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post