ஊரடங்கு உத்தரவை மீறி வேடிக்கை பார்த்தவர்கள் கைது!

ஊரடங்கு உத்தரவை மீறி காவல்துறையினரின் சோதனை நடவடிக்கைகளை வேடிக்கைப் பார்ப்பதற்காக வருகைத்தந்திருந்த குழுவினரை ஹட்டன் போலீஸார் வெளியேற்றி மேலும் கைது செய்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.


இன்று (25) காலை நுவரெலிய காவல்துறை மோப்ப நாய்களின் உதவியுடன் விசேட சோதனையை ஹட்டன் போலீஸார் முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையில், குறித்த சம்பவத்தை பார்ப்பதற்காக தனிமைப்படுத்தல் சட்டங்கள் மற்றும் ஊரடங்கு உத்தரவை மீறி ஏராளமான மக்கள் முச்சக்கரவண்டிகள் மற்றும் உந்துருளிகளில் வருகைத்தந்தனர்.

சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post