கொழும்பு 10 - மாளிகாவத்தை ஜும்ஆ மஸ்ஜித் வீதியில் உள்ள வர்த்தகருக்கு சொந்தமான, வாகன உதிரிப்பாக களஞ்சிய வளாகத்தில் நெரிசலில் சிக்கி உயிர்பலியான மூவரின் உடல்கள் அவர்களின் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி மாளிகாவத்தை முஸ்லிம் மையவாடியில் அடக்கம் செய்யப்படுவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.