கண்டி உட்பட தொரந்தும் ஏழு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை!

இரத்தினபுரி மாவட்டத்திற்கு பிறப்பிக்கப்பட்ட மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.

மேலும் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக ஏழு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கையும் நாளை (23) மாலை 3 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கண்டி, நுவரெலியா, மாத்தளை, கேகாலை, குருணாகல், காலி ஆகிய மாவட்டங்களுக்கு முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
Previous Post Next Post