மூச்சு விட முடியவில்லை... துடிதுடித்து பலியான கறுப்பின இளைஞர்! அமெரிக்காவில் போலீஸின் கொடூர செயல்! (வீடியோ இணைப்பு)

மூச்சு விட முடியவில்லை... துடிதுடித்து பலியான கறுப்பின இளைஞர்! அமெரிக்காவில் போலீஸின் கொடூர செயல்! (வீடியோ இணைப்பு)

அமெரிக்கா, நியூயார்க் மாநிலத்தில் பொலிஸ் விசாரணையின் போது கருப்பின இளைஞர் ஒருவர் பலியானது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக வெளியான வீடியோ இணையத்தை உலுக்கி உள்ளது.

அமெரிக்காவில் பல்வேறு இனக்குழு மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இதில் கருப்பின மக்கள் என்று அழைக்கப்படும் ஆப்ரோ அமெரிக்க மக்கள் பல கோடி பேர் வசிக்கிறார்கள். எப்போதும் போலீசார் எந்த குற்றம் நடந்தாலும் இந்த ஆப்ரோ அமெரிக்க மக்களை கைது செய்வதும், குற்றஞ்சாட்டுவதும் வழக்கம்.

இலங்கையில் இடம்பெரும் தமிழ் முஸ்லீம் மக்களை குறி வைப்பது போலவே அமெரிக்காவில் ஆப்ரோ அமெரிக்க மக்கள் குறி வைக்கப்படுகிறார்கள். அமெரிக்காவில் இப்படி ஆப்ரோ அமெரிக்க மக்கள் பலர் போலீசால் என்கவுண்டர் செய்யப்படுவதும் வழக்கம்.

இந்நிலையில் கடந்த 27ஆம் திகதி அமெரிக்காவில் பொலிஸ் விசாரணையின் போது கருப்பின இளைஞர் ஒருவர் பலியானது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக வெளியான வீடியோ இணையத்தை உலுக்கி உள்ளது.

அதன்படி அமெரிக்காவின் மின்னே பொலிஸ் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு ஜார்ஜ் பிளாய்ட் என்று 46 வயது இளைஞர் போலீசால் கைது செய்யப்பட்டுள்ளார். கள்ள நோட்டு பயன்படுத்தியதாக இவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டார் 20 டாலருக்கு இவர் கள்ள நோட்டு பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு உள்ளது. ஆனால் இவர்தான் குற்றம் செய்த நபர் என்று உறுதியாக பொலிஸாருக்கு தெரியவில்லை.

இந்த நிலையில் கடந்த 27ஆம் திகதி பொலிஸார் இவரை கைது செய்து இருக்கிறார்கள். இவரை காருக்கு வெளியே தள்ளிவிட்டு கழுத்தில் காலை வைத்து அழுத்தி இருக்கிறார்கள். விடாமல் 10 நிமிடம் இவரின் கழுத்தில் காலை வைத்து போலீசார் அழுத்தி உள்ளார். துடித்து போனார் பொலிஸார் இப்படி ஜார்ஜ் கழுத்தில் காலை வைத்து அழுத்தும் போது, அவர் துடித்து போய் இருக்கிறார்.

"என்னால் மூச்சு விட முடியவில்லை. என்னை கொலை செய்யாதீர்கள். என்னை சுவாசிக்க முடியவில்லை!" என்று ஜார்ஜ் மீண்டும் மீண்டும் கூறி உள்ளார்.

ஆனால் பொலிஸார் இது தெரிந்தும் வேண்டும் என்றே அவரை கழுத்தை நெரித்துள்ளனர். அருகில் இருந்த மக்கள் கூறிய பின்பும் பொலிஸார் அங்கிருந்து விலகி செல்லவில்லை.

அங்கு பல கறுப்பின மக்கள் போலிஸுக்கு எதிராக குரல் கொடுத்தும் பொலிஸ் மக்கள் பேச்சை கேட்கவில்லை. இந்த நிலையில் தொடர்ந்து கழுத்தை நெரித்த காரணத்தால் அந்த கருப்பின இளைஞர் அந்த இடத்திலேயே மூச்சு விட முடியாமல் மயக்கம் அடைந்தார். பின்னர் அந்த இடத்திலேயே பலியானார்.

இந்த சம்பவம் தற்போது வீடியோவாக வெளியாகி உள்ளது. போலீசின் இந்த வெறிச்செயல் அப்படியே வீடியோவாக வெளியாகி உள்ளது. மிக மோசம் இந்த அந்நிலையில் தற்போது இந்த செயலில் ஈடுப்பட்ட பொலிஸார் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

மொத்தம் 4 போலீசார் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் வீடியோவாக வெளியானதால் பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இந்த பொலிஸார் மீது தற்போது வழக்கு பதியப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post