பங்களாதேஷ் இற்கான விசேட விமானம்!

கொரோனா வைரஸ் காரணமாக நாடு திரும்ப முடியாமல் பங்களாதேஷில் சிக்கியுள்ள இலங்கையர்களை அழைத்து வருவதற்காக ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விசேட விமானமொன்று பங்களாதேஷ் நோக்கி புறப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு.எல் 1422 என்ற விமானம் இன்று பகல் 12.24 மணியளவில் கட்டுநாயக்க விமானநிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

இவ்விமானம் இன்று மாலை 07.45 மணியளவில் நாட்டை வந்தடையவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது
Previous Post Next Post