இந்தியாவினை குறிவைக்கும் கொரோனா, 24 மணிக்குள் 6000 நபர்கள் பாதிப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா தொற்றுறுதியான 6 ஆயிரத்து 654 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனடிப்படையில் இந்தியாவில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 101 ஆகஅதிகரித்துள்ளது. இந்தியாவின் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த 24 மணித்தியாலங்களில் 137 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

இற்கமைய இந்தியாவில் கொவிட் -19 காரணமாக பலியானோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 720 ஆக அதிகரித்துள்ளது. எவ்வாறாயினும் 51 ஆயிரத்து 784 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தியாவில் கடந்த 4 நாட்களில் கொரோனா தொற்றுறுதியான 25 ஆயிரம் பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் . எவ்வாறாயினும்கொவிட் -19 தொடர்பான பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இந்திய சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் நாளொன்றுக்கு ஆயிரம் பேருக்கு பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் தற்போத இதன் எண்ணிக்கைஒரு லட்சமாக அதிகரித்துள்ளதாக இந்திய சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இந்தநிலையில் கடந்த 24 மணித்தியாலங்களில்இந்தியாவின் மஹராஷ்ட்ரா மாநிலத்தில் கொரோனா தொற்றுறுதியான அதிகமானோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனடிப்படையில் மஹராஷ்ட்ரா மாநிலத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் கொரோனா தொற்றுறுதியான 2 ஆயிரத்து 940 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன் தமிழகத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் 784 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறித்த இரண்டு மாநிலங்களிலேயேஅதிகமானோர் கொவிட் -19 தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது .

இதற்கமைய மஹராஷ்ட்ரா மாநிலத்தில் இதுவரையில் கொரோனா தொற்றுறுதியான 44 ஆயிரம் பேர் அடையாளம்காணப்பட்டுள்ளதோடு தமிழகத்தில் 14 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது.

இந்தநிலையில் சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 53 லட்சத்து 6 ஆயிரத்து 161 ஆகஅதிகரித்துள்ளது.

அத்துடன் சர்வதேச ரீதியில் 3 லட்சத்து 40 ஆயிரத்து 40 பேர் பலியாகியுள்ளனர்.

எவ்வாறாயினும் கொரோனா தொற்றுறுதியான 21 லட்சத்து 60 ஆயிரத்து 43 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளனர்.
Previous Post Next Post