கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் உயர்வு!

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் உயர்வு!

இலங்கையில் மேலும் 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

குவைத்தில் இருந்து வருகை தந்து மின்னேரியா தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த 7 பேருக்கே தொற்றுஏற்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1148 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் குணமடைந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 695 ஆக அதிகரித்தும் உள்ளது.

நாட்டில் இன்றைய தினம் (25) மேலும் 21 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Previous Post Next Post