குவைத்திலிருந்த வந்த பெண் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இறப்பு!!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

குவைத்திலிருந்த வந்த பெண் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இறப்பு!!!

குவைத்தில் இருந்து நாடு திரும்பி திருகோணமலை மங்கி பிரிட்ஜ் இராணுவ முகாமில் தனிமைப்படுத்தலில் இருந்த பெண்ணொருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.

பயாகலையைச் சேர்ந்த குறித்த பெண் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை திடீரென சுகயீனமுற்றுள்ளார். இதனையடுத்து இராணுவத்தினர் அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ள நிலையில், அவர் உயிரிழந்துள்ளதாக சீனக்குடா பொலிஸாருக்கு இராணுவம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், குறித்த பெண்ணின் இரத்த மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் பரிசோதனைகளின் முடிவிலேயே மரணத்துக்கான காரணம் குறித்து தெரியவரும்.

இதேவேளை, ஏற்கனவே இவருடன் குவைத்தில் இருந்து நாடு திரும்பிய பெண்கள் இருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகி நேற்று காத்தான்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.