மஸ்கெலியாவில் பிடிபட்ட கருஞ்சிறுத்தை! (PHOTOS)

உலகில் அரிதான கருஞ்சிறுத்தை ஒன்று மலையகத்தில் மஸ்கெலியா பகுதியில் உள்ள மரக்கறி தோட்டம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்தவலை ஒன்றில் சிக்கிய நிலையில் உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளது.

மஸ்கெலியா - நல்லதண்ணி காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட லக்ஷபான - வாழைமலை பகுதியில் உள்ள மரக்கறி தோட்டத்திலேயேஅந்த கருஞ்சிறுத்தை பிடிபட்டுள்ளது.

அருகிவரும் உயிரினமான கருஞ்சிறுத்தைகள் இலங்கையில் மலைக்காடுகளில் வசிப்பதாக சில மாதங்களுக்கு முன்னர்வனிஜீவராசிகள் திணைக்களத்தினால் உறுதிசெய்யப்பட்டிருந்தது.

சில வனப்பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி காணொளிகளின் மூலமாக கருஞ்சிறுத்தையின் நடமாட்டம்அவதானிக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், குறித்த விலங்கினத்தின் பாதுகாப்பு கருதி , அது வசிக்கும் பகுதி குறித்த விபரங்கள் வெளியாக்கப்பட்டிருக்கவில்லை.

இந்த நிலையில், சிவனொளிபாத மலைக்கு அருகில் உள்ள நல்லதண்ணி பகுதியில் இந்த கருஞ்சிறுத்தை பிடிபட்டுள்ளது.

வலையிலிருந்து அதனை விடுவிக்கும் பணிகளை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக எமது செய்தித்தொடர்பாளர் குறிப்பிட்டார்.
Previous Post Next Post