நாளை முதல் ஹோட்டல்களில் திருமண நிகழ்வுகளுக்கு அனுமதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாளை முதல் ஹோட்டல்களில் திருமண நிகழ்வுகளுக்கு அனுமதி!

quarantine
நாளை (ஜூன் 01) முதல் ஹோட்டல்களில் திருமண நிகழ்வுகளை நடத்த அனுமதி வழங்கப்படும் என சுற்றுலா மற்றும் விமான போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் ஹோட்டல்களில் மூன்றில் ஒரு பங்குடையவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்களுக்குள் 1.5 மீட்டர் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் அமைச்சின் செயலாளர் சிறிபால ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

இதேவேளை சுற்றுலாவை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து சுகாதார அதிகாரிகள் அமைச்சிற்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளனர். நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கவும், பல நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத் துறையை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்களுக்கு நிவாரணத்தை வழங்க அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது என செயலாளர் சிறிபால ஹெட்டியாரச்சி மேலும் தெரிவித்தார்.

அந்தவகையில் ஹோட்டல் ஊழியர்கள், பயண நிறுவனங்கள், சுற்றுலா முகவர் மற்றும் சுற்றுலாவைச் சார்ந்த மற்றவர்கள் இந்த கொடுப்பனவைப் பெறுவார்கள் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.