சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவில் அரசின் 5000 ரூபாய் வீட்டுக்கு வீடு கொடுப்பனவு!

சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவில் அரசின் 5000 ரூபாய் வீட்டுக்கு வீடு கொடுப்பனவு!

‌ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய கொரோனா வைரஸ் தாக்கத்தினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான மே மாதத்துக்கான இரண்டாம் கட்ட கொடுப்பனவு நேற்று (13) சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 51 கிராம சேவையாளர் பிரிவில் வசிக்கும் 70 வயதுக்கு மேற்பட்டோர், வலது குறைந்தோர், சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தலா 5000 ரூபா வீதம் 2165 பயனாளர்களுக்கு வீட்டுக்கு வீடு சென்று வழங்கி வைக்கப்பட்டது.

இன் நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனீபா,சம்மாந்துறை பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எம்.எம் ஆசிக்,சம்மாந்துறை நிர்வாக கிராம உத்தியோகத்தகர் எம்.எல் தஸ்னீம்,கிராம சேவையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

-Madawala News 

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post