இந்தோனேஷியா கடல் எல்லைக்குள் அடித்துச் செல்லப்பட்ட மீனவர்களுடன் கூடிய 30 படகுகளையும் மீட்க நடவடிக்கை!

இந்தோனேஷியா கடல் எல்லைக்குள் அடித்துச் செல்லப்பட்ட மீனவர்களுடன் கூடிய 30 படகுகளையும் மீட்க நடவடிக்கை!

sri lanka
இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இலங்கைக்குச் சொந்தமான 30 ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள் இந்தோனேஷியா கடற்பரப்புக்குள் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக மீன்பிடி, நீரியியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து ஜனாதிபதியின் உத்தரவில் இவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள்  முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த மீனவர்கள் காணப்படும் இடத்தை நோக்கி கடற்படைப் படகுகள் அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் மீன்பிடி, நீரியியல் திணைக்களம் தெரிவித்தது.

குறித்த மீன்பிடிப் படகுகளில் 180 மீனவர்கள் காணப்படுவதாகவும் அவர்களுக்கு இதுவரையில் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என தகவல் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post