அவசரநிலை காரணமாக டுபாயில் உள்ள இலங்கை தூதரகம் மூடப்பட்டுள்ளது.

அவசரநிலை காரணமாக டுபாயில் உள்ள இலங்கை தூதரகம் மூடப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இலங்கை தூதரகம் மீள் அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

அவசரநிலை காரணமாக தூதரகம் மூடப்பட்டுள்ளதாக தூதரகம் வெளியிட்டுள்ள பொது அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொதுமக்கள் [email protected] அல்லது கட்டணமில்லா (Toll Free) +971-800119119 என்ற இலக்கத்திற்கு தூதரகத்தை தொடர்புகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் “அதிக எண்ணிக்கையிலான அழைப்புகள் காரணமாக எல்லா அழைப்புகளுக்கும் தற்சமயம்  பதிலளிக்க முடியாமல் போகலாம். 24 மணி நேரத்திற்குள் மீள அழைப்பு மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூடலின் போது முடிந்தவரை மின்னஞ்சல் அனுப்ப தூதரகம் ஊக்குவிக்கிறது.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post