இலங்கையில் கோவிட்-19 நோயாளர் எண்ணிக்கை மேலும் 10ஆல் உயர்வு!

இலங்கையில் கோவிட்-19 நோயாளர் எண்ணிக்கை மேலும் 10ஆல் உயர்வு!

இன்றைய நாள் (18) முடிவில் இலங்கையின் கோவிட்-19 தோற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் 10 ஆல் அதிகரித்து, தற்போதைய மொத்த எண்ணிக்கை 991 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும் சுகமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 559 ஆக உயர்ந்துள்ள அதே சந்தர்ப்பத்தில் தற்போது சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 423 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய தினம் வரை தனிமைப்படுத்தல் மற்றும் ஊரடங்கு ஒழுங்கை மீறிய 59,000 க்கும் மேற்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 17 பேர் தவறான மற்றும் பொய்யான செய்திகளை சமூக வலைத்தளங்கள் ஊடாக பரப்பியமைக்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post