இன்று முதல் கத்தாரில் முகமூடி கட்டாயம்! மீறினால் 1 கோடி அபராதம்!

இன்று முதல் கத்தாரில் முகமூடி கட்டாயம்! மீறினால் 1 கோடி அபராதம்!

முகமூடி அணியாமல் வெளியே நடமாடுவோருக்கு, இலங்கை மதிப்பின்படி ஒரு கோடி வரை அபராதம் விதிக்கப்படும் என்று கத்தார் அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு, பல்வேறு நாடுகள் முக்கிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

கொரோனாவின் தாக்கம் ஒரு சில நாடுகளில் குறைந்தாலும், ஒரு சில நாடுகளில் இந்த நோயின் பாதிப்பு தீவிரமாகி வருகிறது.

அந்த வகையில், கத்தாரில் கடந்த 24 மணிநேரத்தில் 1,547 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இதனால் அங்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30,972 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் கத்தார் உள்துறை அமைச்சர் தமது விட்டர் பக்கத்தில், வரும் ஞாயிறு முதல் வெளியே செல்வோர் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயமாகிறது என அறிவித்திருந்தார்.

மேலும் உத்தரவை பின்பற்ற தவறுவோருக்கு 2 லட்சம் கத்தார் ரியால்கள் வரை அபராதமும் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அல்லது இரண்டும் விதிக்கப்படும் எனவும், தனியாக வாகனத்தை ஓட்டி வரும் நபருக்கு மட்டும் இதில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post