
வைரஸ் காரணமாக விகிதாச்சாரத்தின் பரவலான பஞ்சத்தால் உலகம் ஆபத்தில் உள்ளது என ஐ.நா உலக உணவு திட்டம் எச்சரிக்கைவிடுத்துள்ளது.
பசியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 135 மில்லியனிலிருந்து 250 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கலாம் என்றுமதிப்பிடப்பட்டுள்ளது.
மோதல் , பொருளாதார நெருக்கடி மற்றும் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட ஏமன், காங்கோ ஜனநாயக குடியரசு, ஆப்கானிஸ்தான், வெனிசுலா, எத்தியோப்பியா, தெற்கு சூடான், சூடான், சிரியா, நைஜீரியா மற்றும் ஹைட்டி ஆகிய 10 நாடுகள் அதிகஆபத்தில் உள்ளது .
தெற்கு சூடானில் , கடந்த ஆண்டு 61 % மக்கள் உணவு நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஐ.நா உலக உணவு திட்டம்வெளியிட்ட புதிய அறிக்கை கூறுகிறது.
தொற்றுநோய்க்கு முன்பே, கிழக்கு ஆபிரிக்கா மற்றும் தெற்காசியாவின் சில பகுதிகள் ஏற்கனவே வறட்சி மற்றும் மோசமானவெட்டுக்கிளியால் ஏற்பட்ட கடுமையான உணவு பற்றாக்குறையை எதிர்கொண்டன.
பேரழிவைத் தவிர்க்க அவசர நடவடிக்கை தேவை என உலக உணவு திட்டத்தின் தலைவர் டேவிட் பீஸ்லி வலியுறுத்தியுள்ளார்.

