
அவுஸ்திரேலியாவில் வெளியாகும் Financial Review எனும் பத்திரிகை தனது பிரத்தியேக செய்திக்குறிப்பில் இதனை தெரிவித்துள்ளது.
ஷெமாரா விக்ரமநாயக்க என்ற பெண்ணே குறித்த பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளார். அவர், Macquarie Group நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக செயற்பட்டு வருகின்றார்.
கடந்த 2018ஆம் ஆண்டு இந்த பதவிக்கு நியமிக்கப்பட்ட அவர், 18 மில்லியன் டொலர்களை சம்பளமாக பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவுஸ்திரேலியா முழுவதுமுள்ள நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளின் சம்பள தரவரிசைப்பட்டியலில் இவரே முதலிடத்தில் உள்ளார் என்றும் Financial Review தெரிவித்துள்ளது.
தலைமை நிர்வாக அதிகாரிகளின் சம்பள தரவரிசை பட்டியலில் ஒரு பெண் முதலிடத்தை பெற்றிருப்பது இதுவே முதல் தடவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.