
ஆண்களுக்கான உடற்பயிற்சி மற்றும் உடற்தகுதி மாதிரி போட்டியில் பர்னாஸ் நவாஷ் பதக்கங்களைப் பெற்று இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளார்.
இப் போட்டி சீன தலைநகர் பீஐிங்கில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது. இதன் போது ஆசிய நாடுகளுக்கான ICN சாம்பியன் போட்டியில் இலங்கை சார்பில் பங்கு பற்றிய பர்னாஸ் நவாஷ் பதக்கங்களையும் சான்றிதழ்களையும் பெற்று இலங்கை நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
இதன் அடுத்த சுற்று போட்டிகள் அவுஸ்ரேலியா மெல்பேர்ன் நகரில் நடைபெறவுள்ளது.

