முழுப் பூசனிக்காயை சோற்றில் மறைக்கும் மாவை!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

முழுப் பூசனிக்காயை சோற்றில் மறைக்கும் மாவை!!

அண்மையில் ஊடகங்களுக்கு கருத்துதெரிவித்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா பௌத்த மதத்திற்கு முன்னுரிமை கொடுக்கமாட்டோம் பௌத்த மதமானது முதன்மையானது என்பதை நாங்கள் ஒருபோதும் எற்கமாட்டோம் என இந்து அமைப்புகளின் ஒன்றியத்தின் எற்பாட்டில் நல்லை ஆதின முன்றலில் இடம்பேற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே மேற்படி கருத்தை முன்வைத்தார்.

பௌத்தத்திற்கு முன்னுரிமை வழங்ககூடாது என்று கருத்து தெரிவித்த இதே மாவை சேனாதிராசாதான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மற்றும் சுமந்திரனுடன் இணைந்து புதிய அரசியல் அமைப்பில் பௌத்தத்திற்கு முன்னுரிமை வழங்குவதை ஆதரித்திருந்தனர் மேலும் சுமந்திரன் அவர்கள் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது பௌத்தமத்திற்கு முன்னுரிமை வழங்குவதை தமிழர்கள் எதிர்க்கவில்லை எனக் கூறியிருந்தார். பாராளுமன்றத்தில் பிரதமர் ரணில் ஆயிரம் விகரை அமைப்பது தொடர்பில் உரையாற்றியபோது வாய்மூடி மௌனிகளாக இருந்தவர்கள் இன்று பௌத்தத்திற்கு எதிராக வீரவசனம் பேசுவது வேடிக்கையாக உள்ளது.

புதுடெல்லியில் மன்மோகன் சிங் உடன் நடந்த அனைத்து கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்திலும் கூட பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்குவதில் எமக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை யென்பதை சம்பந்தன் அவர்கள் தெரிவித்திருந்தார்.

ரணில் அரசாங்கத்தின் வரவுசெலவுத்திட்டத்தில் வடக்கு கிழக்கில் ஆயிரம் விகாரைகளை அமைப்பதற்கான நிதி ஒதுக்கீட்டின்போது சம்பந்தன் தலமையில் இருக்க கூடிய ரெலோஇபுளொட் உட்பட கூட்டமைப்பின் 14 பாராளுமன்ற உறுப்பினர்களும் அதற்கு ஆதரவு அளித்திருந்தனர்.

இவ்வாறாக பௌத்த மதத்திற்கு மறைமுகமாகவும் நேரடியாகவும் ஆதரவு தெரிவித்துவிட்டு இப்பொழுது மாவை சேனாதிராசா அவர்கள் பௌத்தமதத்திற்கு முன்னுரிமை வழங்கப்படுவதையும் வடக்கு கிழக்கில் ஆயிரம் விகாரைகள் அமைப்பதையும் அனுமதிக்கமுடியாது என வீர வசனம் பேசுவது எதிர்வரும் தேர்தல்களில் மக்களை ஏமாற்றுவதற்கான போலிவேடம் என்பது அப்பட்டமாக தெரிகிறது.

கூட்டமைப்பினர் தமிழ் மக்களை முட்டாள்கள் என நினைத்து பாராளுமன்றில் ஒரு கருத்தையும் மக்களிடம் ஒரு கருத்தையும் கூறி வருகின்றார்கள். இவர்கள் பாராளுமன்றில் பௌத்தத்தை ஆதரித்து ஆற்றிய உரைகள் ஊடகங்களிலும் பாராளுமன்ற அதிகார பூர்வ ஹன்சாட்டில் பதியப்பட்டுள்ளது இதுவே இவர்கள் பௌத்த மதத்திற்கு ஆதரவாக செயற்பட்டதற்கான வெளிப்படை ஆதாரங்களாகும்

கட்சி நலன் சார்ந்து சிந்தித்ததன் விளைவே இன்று கூட்டமைப்பினர் முன்னுக்கு பின் முரணான கருத்துக்களை கூறவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள.இவ்வாறு மக்களை தொடர்ந்தும் இவர்கள் ஏமாற்றினால் காலம் இவர்களுக்கு தக்க பாடத்தை புகட்டும் என்பதில் எவ்வித ஜயமும் இல்லை.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.