
நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவுக்கு அருகிலுள்ள பியெரம் நகரிலுள்ள அல் நூர் இஸ்லாமிய நிலையத்தில் நேற்று சனிக்கிழமை இத்துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றது.
பல ஆயுதங்களை வைத்திருந்த நபர் ஒருவர், பள்ளிவாசலுக்குள் புகுந்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டார். இச்சம்பவத்தில் ஒருவர் காயமடைந்தார்.
பின்னர், பள்ளிவாசலில் தொழுவதற்குச் சென்ற ஒருவரால் துப்பாக்கிதாரி மடக்கிப்பிடிக்கப்பட்ட நிலையில், பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.