
இந்த பிரேரணை வாக்கெடுப்பில் ஆதரவாக SLMC இஸ்மாயில் உறுப்பினர்கள் வாக்களித்தார். ஆனால் SLFP ஜஹிர், ACMC ஜலீல், SLMC ரணீஸ், காந்திபன் ஆகியோர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
கடந்த ஓரிரு வாரத்துக்கு முதல் சகோதரர் பஸ்மீரை கல்முனை பிரேரணை தொடர்பாக விமர்சித்தார்கள். ஆனால் அவர் தூர நோக்குடன் செயற்பட்டதன் காரணமாக இன்று சாய்ந்தமருது மக்களுக்கு தனியான சபை வழங்கப்பட வேண்டும் என்ற பிரேரணைக்கு ஆதரவாக தமிழ் உறுப்பினர்கள் சேர்ந்து வாக்களித்து நிறைவேற்றியுள்ளனர். இது இவரின் முயற்சிக்கு கிடைத்த பாரிய வெற்றியாகும்.
ஆனால் கல்முனை மாநகர சபையில் சாய்ந்தமருது தோடம்பழ உறுப்பினர்களால் இதுவரை சாய்ந்தமருதுக்கு தனியான சபை வழங்கப்பட வேண்டும் என்ற பிரேரணை கொண்டு சென்று நிறைவேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.