
இது தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதிக்கு வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதியின் இந்த மனுவுடன் தொடர்புடைய எழுத்து மூல சட்ட விடயங்கள் காணப்படுவதாயின் அதனை எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு முன்னர் ஒப்படைக்குமாறு உயர் நீதிமன்றத்தினால் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திடம் கோரப்பட்டுள்ளது.
பழைய முறைமையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதற்கான இடம்பாடுகள் உள்ளதா என ஜனாதிபதி இந்த மனுவில் நீதிமன்றத்தைக் கோரியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.