
கடந்த சில தினங்களாக வெளிமாவட்ட மக்கள் உள்ளுர் மக்கள் குறித்த வீட்டினை சென்று பார்வையிட்டு புகைப்படங்களும் எடுத்து சென்றுள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (11) மாலை பாண்டிருப்பு முதல் சாய்ந்தமருது வரை அதிகளவான இராணுவத்தினர் பாதுகாப்பு சோதனைக்காக குவிக்கப்பட்டிருந்த நிலையில், இராணுவ உயரதிகாரிகளின் சில குடும்ப உறுப்பினர்களும் குண்டுத் தாக்குதலினால் சேதமடைந்த வீட்டினை பார்வையிட முயற்சி செய்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும், குறித்த தாக்குதலுக்குள்ளான வீட்டை பார்வையிடுவதற்காக வரும் பொதுமக்களிடம் அருகில் உள்ளவர்களிடம் சம்பவம் தொடர்பாக கேட்டறிந்து செல்வதை அவதானிக்கக்கூடியதாக உள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
குறிப்பாக காரைதீவு, மருதமுனை, கொழும்பு, நிந்தவூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் இவ்வாறு சேதமடைந்த வீட்டை சென்று பார்வையிட்டுள்ளனர்.
அண்மைக் காலமாக குண்டுத்தாக்குதலுக்கு உள்ளான வீட்டை கண்காட்சி பொருளாக வெளிமாவட்டத்தில் உள்ள மக்களுக்கு சிலர் கூட்டிச் சென்று காட்டுவதாக பணமும் அறவிட்டுள்ளதாக மற்றுமொரு குற்றச்சாட்டும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த வீட்டை இவ்வாறு சென்று பார்ப்பது தொடர்பாக அருகில் உள்ள மக்கள் அச்சம் தெரிவித்து வருவதுடன் சிலர் இவ்வாறு குறித்த வீட்டை பார்ப்பதன் நோக்கம் அதை புனரமைத்து கொடுப்பதற்காக உதவிகளை பெற நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறி சென்றுள்ளனர்.