
இந்த கோப் குழுவின் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் பாராளுமன்ற கூட்ட அறையில் பொருத்தப்பட்டுள்ள புதிய கெமரா தொகுதியை ஒப்படைக்கும் நிகழ்வு இன்று பிற்பகல் 2.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.
இந்த நிகழ்வுடன் ஊடகங்களுக்கு கோப் குழுவின் நடவடிக்கைகளைப் பார்வையிடுவதற்கான அனுமதியும் உத்தியோகபுர்வமாக வழங்கப்படவுள்ளதாக சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார்.
கோப் குழுவின் கூட்டம் இன்று பிற்பகல் நடைபெறவுள்ளதாகவும் இக்கூட்டம் ஊடகங்களின் பார்வைக்கு இன்று முதல் திறந்து விடப்படவுள்ளதாகவும் சபாநாயகர் மேலும் கூறியுள்ளார்.