ஜனாதிபதி வேட்பாளராக கரு - ரணிலின் அதிரடி முடிவு!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஜனாதிபதி வேட்பாளராக கரு - ரணிலின் அதிரடி முடிவு!!


ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளராகச் சபாநாயகர் கரு ஜயசூரியவை நியமிக்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.

இதன்படி கரு ஜயசூரிய ஜனாதிபதி வேட்பாளராகவும் ரணில் விக்கிரமசிங்க அடுத்த பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராகவும் போட்டியிடவுள்ளனர்.
இந்த அதிரடி முடிவை ஐ.தே.கவின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க எடுத்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள சபாநாயகர் கரு ஜயசூரிய அதற்கான பிரசார வேலைகளை மறைமுகமாக ஆரம்பித்துள்ளார். கடந்த சில தினங்களாக போட்டோஷூட் பலவற்றில் அவர் கலந்துகொண்டார்.

அத்தனகல்லையில் உள்ள பண்டாரநாயக்க சமாதி மற்றும் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதி ஆகியவற்றில் நடந்த போட்டோஷூட்களில் சபாநாயகர் கரு கலந்துகொண்டார்.

அந்த படங்கள் தேர்தல் பிரசாரத்துக்குப் பயன்படுத்தப்படவுள்ளன. அதேபோல நாட்டின் பிரசித்தி பெற்ற இடங்களுக்கும் அவர் செல்லவுள்ளார். ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக கரு நியமிக்கப்பட்ட பின்னர் அவர் தனது சபாநாயகர் பதவியை இராஜிநாமா செய்யவுள்ளார். அதேசமயம் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகி அவர் சுயாதீன ஒருவராகப் போட்டியிடவுள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயாராகுமாறு கருவை பிரதமர் ரணில் கேட்டதையடுத்தே இந்த ஏற்பாடுகள் நடந்துள்ளன.

முன்னதாக கடந்த அரசியல் நெருக்கடி கடந்த வருடம் ஏற்பட்டபோது கரு ஜயசூரிய அதனை மிக இலாவகமாக கையாண்டதால் அவருக்கு அனுபவ முதிர்ச்சியும் அரசியல் ஞானமும் இருப்பதாக பிரதமர் கருதுவதாக சொல்லப்பட்டது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.