
சுவிஸ் தூதுவரின் அதிகாரபூர்வ இல்லத்தில் இந்த விருந்து நடைபெற்று வருகின்றது. தூதுவரின் அழைப்பினை ஏற்று ரதன தேரர் இந்த விருந்தில் பங்கேற்றுள்ளார். இவ்விருந்தில் முப்படைத் தளபதிகளும் இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளனர். முப்படைத் தளபதிகளை கண்ட ரதன தேரர் அருகாமையில் இருந்த பூஞ்செடிகளுக்குள் மறைந்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கொக்டேய்ல் விருந்துபசாரத்திற்கு எவரும் தர்மம் போதிக்க போவதில்லை அது மதுபான விருந்துபசாரம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றேயாகும்.
தேசப்பற்று, இனப்பற்று பற்றி காலை முதல் மாலை வரையில் வீர வசனங்களைப் பேசி வரும் ரதன தேரர், இரவில் சூழ்ச்சிகாரர்கள் என குற்றம் சுமத்தப்படும் மேற்கத்தைய சமூகத்துடன் இணைந்து மதுபானம் அருந்துகின்றார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பிற்குறிப்பு: இந்த சம்பவம் குறித்து ரத்தன தேரரிடம் ஒருவர் கேட்ட போது " அங்கே சிகப்பு வைன் - வெள்ளை வைன் - பியர் மட்டும்தான் இருந்தது " என்றுள்ளார். அத்தனையும் தெரிந்தவர் போல இருக்கே?
-ஜீவன்-