
பால் டேம்பரிங் ஊழலில் ஈடுபட்டதற்காக போட்டித்தடையின் பின் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் நுழைந்த வார்னர் ஆஷஷ் தொடரில் விளையாடி வருகிறார். இப்போட்டியில் முதல் இன்னிங்சில் வார்னர் களமிறங்கியபோது, ஹோலிஸ் ஸ்டாண்டில் இருந்த கூட்டம் "அவரிடம் மணற் காகிதம் உள்ளது" (He's got sandpaper in his hands) என பாடி கேலி செய்துள்ளார்கள்.
இதை சிரித்துக்கொண்டே வேடிக்கை பார்த்த வார்னர் தன் காற்சட்டை பையை கோஷமிட்டவர்களுக்கு காட்டி தன்னிடம் மணல் கடதாசி இல்லை என்பதை பகுடியாக செய்துகாட்டினார்.
சமீபத்தில் முடிவடைந்த ஐ.சி.சி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 இன் போது வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் இருவரையும் இவ்வாறு பார்வையாளர்கள் கேலி செய்திருந்தனர்.