
கொழும்பு காசல் வீதி மகளிர் வைத்தியசாலை மற்றும் டி சொய்சா மகளிர் வைத்திசாலைகளில் பரிசோதனைக்கு தயார்படுத்தப்பட்டு இருந்தும் இதுவரை எவரும் முன்வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பரிசோதனைக்கு நீண்ட நாட்கள் எடுக்கும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அளுத்கே, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன பக்கச்சார்பாக இருப்பதாகவும், அவரின் பரிசோதனைகளில் நியாயம் கிடைக்கும் என்று மக்களுக்கு சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.