
வெவ்வேறு மொழிகளைப் பேசும் திறன் இன்மையே, யுத்த சூழ்நிலைக்கு வழிவகுத்து என்றும் அவர் கூறினார்.
மொழிப் பிரச்சினையால் புரிந்துணர்வு இல்லாமற்போகும் போது அது முரண்பாட்டிற்கு வழிவகுக்கும் என சுட்டிக்காட்டியுள்ள பிரதமர், அந்தக் காலத்தில் தாங்கள் தமிழ் மொழியைக் கற்றுக் கொள்ளவில்லை எனவும் அது தனது குறைபாடு என்றும் குறிப்பிட்டார்.
எனினும் அப்போது ஆங்கில மொழியைக் கற்றுக் கொண்டதாக தெரிவித்த அவர், தமது ஊர்ப் பகுதிகளில் பெரும்பாலான மக்கள் ஒரு மொழியை மாத்திரமே கற்றுக் கொண்டதாகவும், பேசியதாகவும் தெரிவித்ததுடன், இப்போது ஏனைய மொழிகளின் அவசியத்தையும் உணர்வதாக தெரிவித்தார்.