
விளக்க்மறியலில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கஞ்சிபான இம்ரானின் கடத்தல் கும்பல்களுக்கு ஏஜண்ட் மூலமாக தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
துபாயில் தலைமறைவாக இருந்த காலகட்டத்தில் கஞ்சிபான இம்ரான் பாகிஸ்தான் போதைபொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்புற்றிருந்தாக கடந்த தினங்களில் தகவல்கள் வெளியாகின.
ஈஸ்டர் தீவிரவாத தாக்குதலை முக்கியத்துவப்படுத்தி விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தமையால், மாகந்துர மதுஷ் மற்றும் கஞ்சிபான இம்ரான் ஆகியோர் சம்பந்தமான விசாரணைகள் சற்று மந்தமடைந்ததாகவும் தெரிவித்தனர். (இ)