சூறாவளி காலநிலை காரணமாக காலி துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருடந்த " ஸ்ரீலங்கா க்லோரி" எனும் கப்பல் அடித்துச் செல்லப்பட்டு ரூமஸ்ஸல சிலைக்கு அருகிலிருக்கும் கற்பாறையில் மோதுண்டுள்ளது. கப்பலினுள் சேவையில் இருந்த 15 நபர்களும் காப்பற்றப்பட்டுள்ளனர்.
காலி ருகுனு சீமேந்து தொழிற்சாலைக்கு க்லின்க்ர் எடுத்து வரப்பட்ட பாரிய கப்பலே இவ்வாறு அடித்துச் செல்லப்பட்டதாக காலி பொலிஸார் தெரிவிக்கின்றனர். (இ)