
"முஸ்லிம் சமூகத்தின் வாக்குகள் இல்லாமல் எவராலும் ஜனாதிபதி ஆசனத்தை கற்பனை செய்துகூட பார்க்க முடியாது" என்று இங்கே மட்டக்களப்பில் ஹிஸ்புல்லா கூறுகிறாரே, இதுபற்றி நீங்கள் என்ன கூறுகிறீர்கள் என என்னை வழிமறித்து கேட்டார்கள்.
"சில விஷயங்களை பகிரங்கமாக பேசி ரகசியமாக செய்ய வேண்டும். சில விஷயங்களை ரகசியமாக பேசி பகிரங்கமாக செய்ய வேண்டும். அவை எவை என்ன என்பவற்றை சரியாக தீர்மானிப்பவனே பொறுப்புள்ள அரசியல்வாதி. இலங்கை போன்ற ஒரு பல்லின நாட்டில், சுய பிரபல்யத்திற்காக நாவடக்கமின்றி பேசுவோர் தமது இனத்தை ஆபத்தில் தள்ளுகிறார்கள்" என்று நான் பொதுப்படையாக பதில் சொன்னேன்.
வேறு என்னத்த சொல்ல...? ஏற்கனவே இல்லாத பொய்களை எல்லாம் சோடித்து சாமானிய முஸ்லிம் மக்களை, "சந்தேக வலய" த்தில் "அவன்கள்" வைத்திருக்கிறான்கள். இதில் இது வேறயா..!