
இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் திரும்பியது. இதனால், டெஸ்ட் மற்றும் ஒரு நாள், டுவென்டி 20 அணிக்கு தனித்தனியாக
தலைவர்களை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்த முடிவு விரைவில் எடுக்கப்படலாம் எனத்தெரிகிறது.
இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அதிகாரி ஒருவர் கூறுகையில், “; அடுத்த மாதம் உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் ஆரம்பிக்கின்றது. இதில் பாகிஸ்தான் அணி இலங்கை, அவுஸ்திரேலியா, பங்களாதேஷ் உள்ளிட்ட அணிகளுடன் மோத உள்ளது. இதன்பின், அடுத்த ஆண்டு அவுஸ்திரேலிய மண்ணில் டுவென்டி 20 உலக கோப்பை நடக்கவுள்ளது.
இதைபோல, 9 முதல் 10 டுவென்டி 20 போட்டிகளில் பங்கேற்க உள்ளது. இந்த நெருக்கடியான நிலையை சமாளிக்க, டெஸ்ட் மற்றும் ஒரு நாள், டுவென்டி 20 அணிகளுக்கு தனித்தனியாக தலைவர்கள், பயிற்சியாளர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மாத இறுதியில் நடக்கவுள்ள கிரிக்கெட் சபையில் இறுதி முடிவு எடுக்கப்பட வாய்ப்புள்ளது,”என்றார்.