நீல் ஆம்ஸ்றோங்க் சந்திரனில் காலடி வைத்தது அமெரிக்காவின் திட்டமிட்ட வதந்தியா?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நீல் ஆம்ஸ்றோங்க் சந்திரனில் காலடி வைத்தது அமெரிக்காவின் திட்டமிட்ட வதந்தியா?

Neil Armstrong Never been to Moon
GPS உட்பட குறிப்பிடத்தக்க எந்தவொரு தொழிநுட்பமும் இல்லாத இற்றைக்கு சுமார் 50 வருடங்களுக்கு முன்னால் (20.07.1969) அமெரிக்காவை சேர்ந்த நீல் ஆம்ஸ்றோங்க் சகோதரர்கள் சந்திரனில் முதன்முதலாக காலடி வைத்ததாக அறிவிக்கப்பட்டது.

அது தொடர்பாக ஒரு சில புகைப்படங்களும் அபோது வெளியிடப்பட்டு பாட புத்தகங்களிலும் அது பதிவாகி கற்பிக்கப்பட்டது.

பூமியிலிருந்து சுமார் 384400 KM தொலைவிலுள்ள சந்திரனில் சுமார் 50 வருடங்களுக்கு முன்னால் காலடி வைத்து படம் பிடித்து வெளியிட முடிந்த அமெரிக்க விஞ்ஞானத்தால் அதி நவீன தொழிலுட்பம் நிறைந்த இன்றைய காலத்தில் கட்டத்தில் அதே சந்திரனில் நேரடியாக தரையிறங்கி அதில் இருப்பது மண்ணா, கற்பாறையா, வெள்ளியா, தங்கமா என்பதை ஒரு வீடியோவாக அல்லது படமாக இந்த நிமிடம் வரை வெளியிட முடியவில்லை.

இன்னும் சொல்லப்போனால் சந்திரனில் இருந்தல்ல சந்திரனுக்கு அப்பால் ஒரு 10 கிலோ மீற்றர் தூரத்தில் நின்றேனும் சந்திர மண்டலத்தை குளோஸ்அப் படம் பிடித்து காட்ட முடியவில்லை.

பூமியிலிருந்தும், விண்வெளியிலிருந்தும் அதிநவீன கமெராக்கள் மூலம் பிடித்த படங்களையே இன்னும் எடிற் செய்து கண்பித்து கொண்டிருக்கிறார்கள்.

இதுவரைக்கும் எத்தனையோ விண்கலங்கள் சந்திரனில் லேண்டிங்க் ஆகி இருப்பதாக செய்திகள் வெளியாக்கப்படுகிறதே தவிர அங்கு ஒரு மனிதன் தரையிறங்கி நடமாடக்கூடிய காணொளிகள் எதனையும் இந்த நிமிடம் வரை வெளியிட முடியவில்லை.

எனவே தனது ஆளுமையை அல்லது வல்லரசை உலகுக்கு பறைசாற்ற இதுபோன்ற திட்டமிடப்பட்ட கதைகளை விஞ்ஞானத்தின் பெயரால் அப்போது அமெரிக்கா கட்டவிழ்த்து விட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் இல்லாமலில்லை.

அப்போது விட்ட கதை போன்று இப்போதும் ஒரு புதிய புதிர் விடப்பட்டுள்ளது.

பூமிக்கு மிக அருகிலுள்ள சந்திரனை முழுமையாக ஆராய்ச்சி செய்ய முடியாத விஞ்ஞானம் சந்திரனையும் தாண்டி சுமார் 54.6 மில்லியன் km தொலைவிற்கு அப்பாலுள்ள செவ்வாய் கிரகத்தில் மிக விரைவில் மனிதனை குடியேற்ற போவதாக அறிவித்திருப்பதுதான் மற்றுமொரு புதிர்.


கற்பனைக்கெட்டாத அண்டசராசரங்களுக்குள் சுமார் 54.6 மில்லியன் KM தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்தை அணுகி ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானம் இங்கு பூமியின் சிறியதொரு பரப்பில் பயணிகளுடன் பறந்து காணாமல் போகும் பல விமானங்களை இதுவரை கண்டு பிடிக்கவே முடியவில்லை என்பதுவும் பாரிய பலவீனம்தான்.


கடந்த 2014 ம் ஆண்டு மார்ச் மாதம் 239 பயணிகளுடன் ஒரு சில ஆயிரம் அடிகள் உயரத்தில் பறந்து சில நிமிடங்களில் காணாமல் போன மலேசிய விமானத்தை அதிநவீன தொழினுட்பங்களுடன் வருட கணக்கில் தேடுதல் நடத்தியும் இதுவரை கண்டு பிடிக்கவே முடியவில்லை.

அது கடலில் விழுந்ததா? காட்டிற்குள் விழுந்ததா என்பதை கூட விண்வெளியில் விடப்பட்டிருக்கும் நவீன சட்லைட்கள் மூலம் கண்டு பிடிக்க முடியாமல் போனது பெருத்த பலவீனமாகும்.

அண்டசராசரத்தில் பாயும் விஞ்ஞானம் இங்கே ஆழ்கடலினுள் அல்லது அடர்ந்த காடுகளுக்குள் பாயாதது ஏன்?

அதுமட்டுமன்றி பூமியில் எங்கேனும் ஓரிடத்தில் நில அதிர்வுகள் (பூகம்பம்) ஏற்படுமாயின் அது ஏற்படும் வரையில் முன்கூட்டியே அது பற்றி விஞ்ஞானத்தால் இதுவரை எதிர்வு கூறவே முடியாதுள்ளது.

நிலநடக்கம் ஏற்பட்ட பின்புதான் அதுபற்றி அறிவித்து எச்சரிக்கை செய்ய முடிகிறது.

சுனாமியும் அவ்வாறுதான். எங்கு எத்தனை மணிக்கு தாக்கும் என்பதையும் துல்லியப்படுத்த முடியாது.


இவ்வளவு நவீன காலத்தில் இத்தனை பலவீனங்களை வைத்துக்கொண்டு..


நவீனமே இல்லாத 50 வருடங்களுக்கு முன்னால் சந்திரனில் கால் பதித்து மீண்டும் பாதுகாப்பாக பூமிக்கு திரும்பி வந்ததாக அமெரிக்கா விட்ட கதையை எந்த விஞ்ஞானத்தை வைத்து ஏற்றுக்கொள்வது??

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.