
இந்த வாழ்க்கை வரலாற்று படத்துக்கு "800" என தலைப்பிடப்பட்டுள்ளதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.தனது 18 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் டெஸ்ட் போட்டியில் எவருமே எட்டிப்பிடிக்க முடியாத சாதனையாக 800 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார் முரளிதரன்.
மிகப்பெரிய செலவில் எதிர்வரும் டிசம்பர் மாதம் இந்தப்படத்துக்கான படப்பிடிப்பு இந்தியா,இலங்கை, இங்கிலாந்து மற்றும் உலகின் பலபகுதிகளிலும் நடத்தப்படவுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
சூதுகவ்வும்,விக்கரம்வேதா உட்பட தமிழில் சிறந்த படங்களில் நடித்த விஜய்சேதுபதிக்கு தமிழ் திரைப்படத்துறையில் தனி மதிப்பு உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்திய சினிமாவில் நட்சத்திரங்களின் வாழ்க்கை வரலாற்றில் நடிப்பது தற்போது வழக்கமாகிவிட்டது.டோனி ,சச்சின் ஆகியோர் தமது வாழ்க்கை வரலாற்று படங்களை வெளியிட அனுமதித்து அவை வெளிவந்து வெற்றிபெற்றன.இந்தநிலையில் தற்போது ரன்வீர்சிங்,இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவ் தொடர்பான 83 என்ற தலைப்பிடப்பட்ட படத்தில் தனது மனைவி தீபிகா படுகோனுடன் நடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.