
இதன்போது குறித்த பேராசிரியர் உட்பட 8 பேரை ஜூலை மாதம் 29 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் இதற்கு முன்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நால்வர் இன்ற அத்தனகல்ல நீதிமன்றத்தில் ஆஜரானதை அடுத்து இவ்வாறு 8 பேரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு - கண்டி விதியில் கலகெடிஹேன பிரதேசத்தில் பயணித்துக் கொண்டிருந்த வேன் ஒன்று, முக்கிய பிரமுகர் ஒருவரின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் கடந்த 18ம் திகதி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவால் கொழும்பு குற்றப் பிரிவுக்கு உத்தரவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.