
இந்த விபத்து (15) சனிக்கிழமை காலை 09.30 மணி அளவில் இடம்பெற்றுள்ளது.
அம்பகமுவ உடபுலத்கம பகுதியை சேர்ந்த 23 வயதுடைய சந்துன் மதுரங்க என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்தார்.
கொழும்பில் இருந்து ஹட்டன் பகுதியை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டியும், கினிகத்தேன பகுதியில் இருந்து ரஞ்சிராவ பகுதிக்கு சென்ற ஊந்துருளியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன் படுகாயமடைந்து நாவலபிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற பின்னர் உயிரிழந்தள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பஸ்ஸின் சாரதி கைது செய்யபட்டுள்ளதாக கினிகத்தேன பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கினிகத்தேன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.