
புலனாய்வு அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி இணைய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியில் தொடர்ந்தும் கூறப்பட்டுள்ளதாவது,
“இந்த தாக்குதலை உள்ளூர் குழுவினரே நன்கு திட்டமிட்டு மேற்கொண்டுள்ளனர் என்பதனை விசாரணை அதிகாரிகள் உறுதிசெய்துள்ளனர். இந்த தாக்குதல் குறித்த காணொளி இந்தோனேசியா வழியாகவே ஐ.எஸ் அமைப்பிற்கு அனுப்பப்பட்டுள்ளது.
அதனையே அவர்கள் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளனர். பின்னர், ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அல்- பக்தாதி, இலங்கை தொடர் தற்கொலை குண்டுதாக்குதலுக்கு உரிமை கோரியிருந்தார்.
இந்த தாக்குதலை நடத்தியவர்கள் அல்-பக்தாதியின் தலைமையில் செயற்படவில்லை. எனினும் ஐஎஸ் அமைப்பின் உறுப்பினர்கள் சிலருடன் அவர்கள் சில வழிகளில் தொடர்பு கொண்டிருக்கலாம்.
இந்நிலையிலேயே, இலங்கையில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதலை நடத்தியவர்கள் தூய ஐ.எஸ் தீவிரவாதிகள் கிடையாது” என அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளதாக அந்த செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.
#தமிழ்வின்