ஓய்வூதியக்காரர்களின் சம்பள முரண்பாட்டை நீக்கும் திட்டம் ஜுலை மாதம் முதல் அமுல்!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஓய்வூதியக்காரர்களின் சம்பள முரண்பாட்டை நீக்கும் திட்டம் ஜுலை மாதம் முதல் அமுல்!!

pension sri lanka
2019ம் அண்டு வரவு செலவுத் திட்ட முன்மொழிவின் மூலம் ஓய்வூதியக்காரர்களின் சம்பள முரண்பாட்டை நீக்கும் திட்டம் ஜுலை மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இதற்கமைய 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் திகதிக்கு முன்னர் ஓய்வுபெற்ற 5 இலட்சம் பேர் இதன்மூலம் ஓய்வூதிய சம்பள அதிகரிப்பைப் பெறுவதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.

இதன் கீழ் ஓய்வூதியக்காரர்களின் மாதாந்த சம்பளம் 2800 மற்றும் 24 ஆயிரம் ரூபாவுக்கும் இடையில் அதிகரிக்கும். 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் திகதிக்கு முன்னர் சேவையில் இருந்து ஓய்வுபெற்ற அரச ஊழியர்களின் ஓய்வூதிய சம்பளத்தில் நிலவிய முரண்பாடு நீக்குவதன் ஊடாக ஓய்வூதியக்காரர்களுக்கு நிவாரணம் கிடைக்கின்றது.

இதற்கமைவாக ஓய்வூதியம் பெற்ற அலுவலகப் பணியாளர் உதவியாளர் தரம் ஒன்று ஓய்வூதியக்காரர்களின் சம்பளம் 2800ஆல் அதிகரிக்கிறது. முகாமைத்துவ உதவியாளர் தரம் 1 ஓய்வூதியக்காரர்களுக்கு 5 ஆயிரத்து 200 ரூபாவால் சம்பளம் அதிகரிக்கிறது. ஆசிரிய சேவையில் தரம் ஒன்றில் ஓய்வுபெற்றவர்களின் சம்பளம் 9,200 ஆல் அதிகரிக்கிறது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.